தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


UPDATED : மே 13, 2026 05:35 AM

ADDED : மே 13, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 05:35 AM ADDED : மே 13, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை 'ஸ்டார்ட் அப்' ரூ.9.40 கோடி திரட்டியது


செ ன்னையை சேர்ந்த புத்தொழில் நிறுவனமான, 'விக்ரா ஓஷன் டெக்' நிறுவனம், தண்ணீருக்கு அடியில் மேற்கொள்ளப்படும் பல வகை ஆய்வுகளுக்கு தேவைப்படும் கருவிகளை உருவாக்கி வருகிறது. இந்நிறுவனம், 9.40 கோடி ரூபாய் நிதியை, 'பின்லவ்' உள்ளிட்ட முதலீட்டாளர்களிடம் திரட்டியுள்ளது.

99,500 கோடி ரூபாய் திரட்டுகிறது 'எக்சிம்' வங்கி



எ க்சிம் வங்கி, நடப்பு 2026 - 27 நிதி ஆண்டில் 99,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 66,000 கோடி ரூபாய் உள்நாட்டு சந்தை வாயிலாகவும், மீதமுள்ள தொகை சர்வதேச சந்தை வாயிலாகவும் திரட்டப்படும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் சேவை வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'சாம்சங்' நிறுவனத்தின் மறுசீரமைக்கப்பட்ட போன்கள்



சா ம்சங் நிறுவனம், 'சர்டிபைடு ரீ-நீவ்டு' என்ற பெயரில் மறுசீரமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. இதில் கேலக்ஸி எஸ்25., மற்றும் ஏ - சீரிஸ் மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த போன்களுக்கு ஒரு வருட வாரன்டி மற்றும் புதிய மென்பொருள் அப்டேட்கள் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us