தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


UPDATED : மே 17, 2026 04:23 AM

ADDED : மே 17, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2026 04:23 AM ADDED : மே 17, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலி நாட்டில் 'ஹெச்.சி.எல்.,'

பொ துத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட், சிலி நாட்டின் காப்பர் சுரங்க தொழிலில் கால் பதிக்க உள்ளது. இதற்கு ஆலோசனை வழங்க ஒரு பரிவர்த்தனை ஆலோசகரை நியமித்து உள்ளது. இந்தியாவின் காப்பர் தேவையை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்டார்பக்ஸ்' புதிய அலுவலகம்



பி ரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், இந்தியாவில் தனது முதல் கார்ப்பரேட் அலுவலகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தனக்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளை பிற நிறுவனங்களில் இருந்து பெறுவதற்கு பதிலாக, சொந்த ஊழியர்களை பயன்படுத்தி பெறுவதற்காக இந்த அலுவலகம் அமைக்கப்படுகிறது. இதன் வாயிலாக கிட்டத்தட்ட 19,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனா வங்கியில் டி.வி.எஸ்., முதலீடு

ஜ னா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் 10 சதவீத பங்குகளை டி.வி.எஸ்., வேணு குழுமம் 450 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. அதேசமயம், வங்கியின் நீண்டகால கூட்டாளியான டி.பி.ஜி., கேபிடல் தனது பங்குகளை பகுதியாக குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்வங்கி, விரிவாக்க திட்டப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us