தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : மே 21, 2026 02:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 02:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்ட்ரல் வங்கியின் 150 புதிய கிளைகள்



நாடு முழுதும் 4,585 கிளைகளை கொண்ட சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி புதிதாக 150 கிளைகளை திறக்க உள்ளதாக அதன் எம்.டி கல்யாண்குமார் கூறியுள்ளார். வங்கி செயல்பாட்டை மேம்படுத்தவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், கடன் வழங்குவதை அதிகரிக்கவும் முனைந்துள்ளது. இதற்காக புதிதாக 1,400 பணியாளர்களை நியமனம் செய்யவும் உள்ளது.

ஊதிய உயர்வு: டி.சி. எஸ்., ஊழியர்கள் புகார்


ஐ. டி., நிறுவனமான டி.சி.எஸ்., பணியாளர்களின் ஊதியத்தை 5 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்திருந்த நிலையில் ஊதியத்தை குறைத்துள்ளதாகவும் ஆண்டு சம்பளம் மாற்றம், குறைந்த வேரியபுள் பே ஆகியவற்றிலும் கை வைத்துள்ளது என்றும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை டி.சி.எஸ் ., நிறுவனம் மறுத்துள்ளது.

சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்பு



நா ட்டில் சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை உயரும் என சன்வின் குரூப் சி.இ.ஓ., சந்தீப் பஜோரியா கூறியுள்ளார். உலகின் மிகப் பெரிய பாமாயில் ஏற்றுமதி நாடான இந்தோனேஷியா பயோ எரிவாயு தயாரிக்க பாமாயிலை பயன்படுத்துவதாக அறிவித்ததால் நாட்டின் எண்ணெய் இறக்குமதி பாதித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us