தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : மே 26, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி + ஹெச் சொல்யூஷன்ஸ்

ஜெர்மனி நாட்டின் விவசாய தொழில்நுட்ப நிறுவனமான 'பி + ஹெச் சொல்யூஷன்ஸ்', இந்தியாவில் நானோ உரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க இந்த ஆண்டு இறுதிக்குள், 11 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உலோக அடிப்படையிலான இந்த நவீன உரங்களுக்கு இந்தியாவில் அனுமதி கிடைத்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிட்பி

கிராமப்புறங்களில் செயல்படும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதி வழங்குவதை விரிவாக்கம் செய்ய, பிராந்திய கிராமப்புற வங்கிகளுடன் இணைந்து கூட்டு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, 'சிட்பி' எனப்படும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் சி.எம்.டி., மனோஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.

சையன்ட் செமிகண்டக்டர்ஸ்

'சையன்ட் செமிகண்டக்டர்ஸ்' நிறுவனம், எடெல்வைஸ் நிறுவனம் நிர்வகிக்கும் நிதியமைப்புகள் வாயிலாக கிட்டத்தட்ட 285 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. நிறுவனத்தின் உலகளாவிய சிப் வடிவமைப்பு மற்றும் செமிகண்டக்டர் வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இந்த மூலதன நிதி பயன்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ்

ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், இந்தியாவின் கிராமப்புற மற்றும் சிறு நகர சந்தைகளுக்கு தனது காப்பீட்டு சேவைகளை எளிதாக கொண்டு சேர்க்க, பிரமல் பைனான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய வர்த்தக கூட்டணி வாயிலாக எளிய மக்களுக்கும் காப்பீட்டு திட்டங்கள் எளிதாக சென்றடையும் என கூறப்படுகிறது.

ஹிண்டால்கோ

மேற்காசிய போர் சூழலால் உலக சந்தையில் ஏற்பட்ட வினியோக பாதிப்புகளை தொடர்ந்து, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளுக்கான தங்களின் அலுமினிய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது. சர்வதேச வினியோக பற்றாக்குறையை தீர்க்க இந்த ஏற்றுமதி வாய்ப்பை நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

7 லெவன்

ஜப்பானின் 'செவன் - லெவன்' நிறுவனத்தை தொடங்கியவரும், அந்நாட்டின் சில்லரை வர்த்தக துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான தோஷிபுமி சுசூகி, மாரடைப்பு காரணமாக தனது 93 வயதில் காலமானார். இவரது வர்த்தக உத்திகள் சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us