தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


ADDED : மே 27, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 11:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பைஜூஸ்

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத குற்றச்சாட்டின் பேரில், 'பைஜூஸ்' நிறுவனரான பைஜூ ரவீந்திரனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவு வெறும் நீதிமன்ற சம்பிரதாயம் மட்டுமே என கூறியுள்ள ரவீந்திரன், தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

என்.எஸ்.இ.,

இந்தியாவில் ஸ்டீல் மற்றும் கமாடிட்டி டெரிவேட்டிவ் சந்தையை மேம்படுத்த, என்.எஸ்.இ.,

எனப்படும் தேசிய பங்குச்சந்தையும், 'சுபி' எனப்படும் இந்திய ஸ்டீல் நுகர்வோர் கூட்டமைப்பும் ஒப்பந்தம் செய்துள்ளன. சந்தையில் விலை ஏற்ற இறக்க அபாயங்களை ஸ்டீல் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சமாளிக்க இந்த ஒப்பந்தம் உதவும்.

ஜான்சன் லிப்ட்ஸ்

ஜான்சன் லிப்ட்ஸ் நிறுவனம், தனது தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 200 கோடி ரூபாய் முதலீட்டில் தனது அதிவேக லிப்டுகள் மற்றும் எஸ்கலேட்டர்களின் உற்பத்தியை இந்நிறுவனம் அதிகரிக்க உள்ளது. அந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, சென்னை அருகே இந்நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கு 39 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளது.

எல் அண்டு டி.,

எல் அண்டு டி., நிறுவனத்தின் தொழிலக மின்னியல் பிரிவு, இஸ்ரேல் நிறுவனமான இ.வி.ஆர்.,

மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் இ.வி., டிராக் ஷன் மோட்டார்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மேம்பட்ட மின்சார மோட்டார்கள் தமிழகத்தின் கோவை பகுதியில் உள்ள எல் அண்டு டி., ஆலையில் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.இ.சி.,

மின் பகிர்மான கட்டமைப்பு நிறுவனமான கே.இ.சி., இன்டர்நேஷனல், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. மின் வினியோகம், உள்கட்டமைப்பு மற்றும் கேபிள்கள் தயாரிப்பு போன்ற பிரிவுகளில் கிடைத்துள்ள இந்த ஆர்டர்கள், நிறுவன வளர்ச்சியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதஞ்சலி புட்ஸ்

பதஞ்சலி புட்ஸ் நிறுவனம், கடந்த 2022 - -23 நிதி ஆண்டிற்கான வரி செலுத்தியதில் முறைகேடு செய்ததாக கூறி, 1,353 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரி மற்றும் அபராதம் செலுத்த, சென்னை மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரி வரவு தொடர்பான கணக்குகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us