தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


ADDED : மே 28, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹெச்.டி.எப்.சி., கேபிட்டல்

இந்தியாவில், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீட்டு கடன் அளிப்பதற்காக, ஹெச்.டி.எப்.சி., கேபிட்டல் நிறுவனமும் ஜப்பான் வளர்ச்சி வங்கியும் கைகோர்த்துள்ளன. இதற்காக, கிட்டத்தட்ட 9,600 கோடி ரூபாய் மூலதனம் கொண்ட ரியல் எஸ்டேட் நிதியத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

பாரத் டாக்ஸி

நாடு முழுதும் 6 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் மற்றும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட செயலி பதிவிறக்கங்களுடன், பாரத் டாக்ஸி தளம் உலகின் மிகப்பெரிய கட்டண போக்குவரத்து

கூட்டுறவு தளமாக உருவெடுத்து உள்ளது. குஜராத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம்

ஓட்டுநர்கள் இத்தளத்தில் இணைந்துள்ளனர்.

நெட்ராசெமி

ஜோஹோ நிறுவனத்தின் முதலீட்டுடன் செயல்படும், கேரளாவை சேர்ந்த 'நெட்ராசெமி' ஸ்டார்ட்அப் நிறுவனம், தனது முதல் 'ஏ2000' ஏ.ஐ., சிப் வர்த்தக தயாரிப்புக்கு தயாராக உள்ளதாக அறிவித்து உள்ளது. உள்நாட்டில் இந்த சிப், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை செயல்படுத்த உதவும்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த 2025 - 26 நிதியாண்டில், அரசுக்கு 2.16 லட்சம் கோடி ரூபாயை வரியாக செலுத்தி உள்ளது. அந்நிறுவனம் உருவாக்கிய ஒவ்வொரு 100 ரூபாயிலும் 47 ரூபாய் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் எரிசக்தி, டெலிகாம் போன்றவை முக்கிய பங்கு வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பின்சர்வ்

பஜாஜ் பின்சர்வ் நிறுவனம்,மும்பை ஐ.ஐ.டி., உடன் இணைந்து 'பின்சர்வ் இன்டெலிஜென்ஸ்' என்ற புதிய தளத்தை தொடங்கி உள்ளது. அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏ.ஐ., சைபர் பாதுகாப்பு, பின்டெக் உள்ளிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 2,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா ஆட்டோகாம்ப்

டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனம், மின்சார வாகனங்களுக்கான அதிநவீன ஹீட்டர்களை தயாரிப்பதற்காக, தென்கொரியாவின் ஜாவா எலக்ட்ரானிக்ஸுடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளது. சந்தை தேவைகளை நிறைவு செய்யவும், தயாரிப்பு செலவை குறைக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us