தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


UPDATED : மே 29, 2026 11:59 PM

ADDED : மே 29, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 29, 2026 11:59 PM ADDED : மே 29, 2026 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ஸ்க்

சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனமான மார்ஸ்க், இந்தியா - சீனா இடையேயான வர்த்தக இணைப்பை வலுப்படுத்த, 'எப்.ஐ.2' என்ற புதிய கடல்வழி சேவையை தொடங்க உள்ளது. இந்த வாராந்திர சேவை, வாகன உதிரிபாகங்கள், ரசாயனம் மற்றும் தொழில்நுட்ப துறைகளுக்கான சரக்கு போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும்.

பெர்னோட் ரிகார்ட்

பிரெஞ்சு மதுபான நிறுவனமான 'பெர்னோட் ரிகார்ட்', டில்லியில் மதுபானம் விற்க, நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. அந்நிறுவனம் மீதான வழக்கு ஒன்றில், சந்தை பங்கை அதிகரிப்பதற்காக அது முறைகேட்டில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி, டில்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.



குவாலிட்டி வால்ஸ்

குவாலிட்டி வால்ஸ் நிறுவனத்தின் ஐஸ்கிரீம்கள், இனி முற்றிலும் பால் மட்டுமே சார்ந்த தயாரிப்புகளாக மாற்றப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இது இந்தியாவுக்கு மட்டுமேயான மாற்றம் அல்ல எனவும், உலகளவில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பின் ஒரு பகுதி எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த 2007ல் நடைபெற்ற ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவன பங்கு வர்த்தகத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு எதிராக செபி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இவ்வழக்கில் ரிலையன்ஸ் செலுத்தி இருந்த 250 கோடி ரூபாயை திரும்ப வழங்கவும் செபிக்கு உத்தரவிடப்பட்டது.

ஷாவ்மி

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மி, இந்தியாவில் சரிந்து வரும் தனது சந்தை பங்குகளை மீட்டெடுக்க, தனது தெற்காசிய பிராந்திய தலைவர் அலெக்சாண்டர் டாங்கை இந்திய பிரிவு தலைவராக நியமித்து உள்ளது. கடந்த 2022 முதல் இப்பிரிவை வழிநடத்தி வந்த ஆல்வின் ஸேவுக்கு பதிலாக, இவர் அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.

அர்பன் கம்பெனி

அர்பன் கம்பெனி நிறுவனத்திற்கு எதிராக தமிழ்நாடு வணிக வரித்துறை வெளியிட்டு இருந்த 8.70 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., அபராத நோட்டீஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தங்களின் பதில், அதிகாரிகளுக்கு திருப்தி அளித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us