டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : ஜூன் 09, 2026 07:19 AM
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் செ பி அமைப்பின் அழுத்தம் மற்றும் நிதி முறைகேடு புகார்களை தொடர்ந்து, எல்.ஐ.சி., நிறுவனத்தின் முதலீட்டு முடிவுகளுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் மேத்தா கூறியுள்ளார். எல்.ஐ.சி., அலுவலகம் எங்குள்ளது என்பது கூட தமக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பந்தன் பேங்க் ப ந் தன் வங்கி கர்நாடகா, உத்தர பிரதேசம், டில்லி மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் புதிதாக எட்டு கிளைகளை நேற்று திறந்தது. இதன் வாயிலாக இவ்வங்கியின் நாடு தழுவிய கிளைகளின் எண்ணிக்கை 1,984 ஆக உயர்ந்துள்ளது. மைசூரு, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த புதிய கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன.
டி.இ.இ., டெவலப்மென்ட் பொ றியியல் உள்கட்டமைப்பு நிறுவனமான டி.இ.இ., டெவலப்மென்ட் இன்ஜினியர்ஸ், பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டிடம் இருந்து 386.83 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆர்டர், இந்நிறுவனத்தின் நீண்டகால வருவாய் வளர்ச்சியை வலுப்படுத்த உதவும்.