ADDED : ஜூலை 03, 2026 06:38 AM

கோல் இந்தியா: நிலக்கரி வினியோகம் உயர்வு
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், கடந்த ஜூன் மாதத்தில் கோடைக்கால உச்சகட்ட மின்சார தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கியதால், அம்மாதத்தில் அதன் மின் வினியோகம் 2025 மே மாதத்தை விட 5.9 சதவீதம் அதிகரித்து, 5.14 கோடி டன்னாக உள்ளது.
பேங்க் ஆப் இந்தியாவின் கடன் வழங்கல் 19% உயர்வு
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியாவின் கடன் அளிப்பு, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 19 சதவீதம் அதிகரித்து 7.97 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவித்து உள்ளது. கடந்த 2025 - 26 நிதியாண்டி ன் இதே காலாண்டில், சில்லரை, விவசாயம், எம்.எம்.எஸ்.எம்.இ., என அனைத்து பிரிவுகளிலும் இவ்வங்கியின் மொத்த கடன் அளிப்பு 6.72 லட்சம் கோடி ரூபாயாகும்.
நெதர்லாந்து அரசுடன் டாடா ஸ்டீல் பேச்சு
நெதர்லாந்தில் அமலில் உள்ள கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் கார்பன் உமிழ்வு விதிமுறைகளுக்கு மத்தியில், அங்குள்ள தனது ஆலை அமைப்பு திட்டம் குறித்து டாடா ஸ்டீல் நிறுவனம் அந்நாட்டு அரசுடன் பேசி வருகிறது. கடும் விதிகளால் ஏற்படும் சவால்களை சமாளித்து, புதிய உள்கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
'டுட்ரூ ஹைப்பர்லுாப்' உடன் டிடாகர் ரயில் புதிய கூட்டணி
டிடாகர் ரயில் சிஸ்டம்ஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் ஹைப்பர்லுாப் அடிப்படையிலான சரக்கு போக்குவரத்து வினியோக கட்டமைப்பை உருவாக்குவதற்காக, ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆதரவு பெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனமான 'டுட்ரூ ஹைப்பர்லூப்' உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
