ADDED : ஜூலை 05, 2026 02:23 AM

கிராமப்புற சந்தையில் கோல்கேட்- பாமோலிவ்
கோல்கேட்- - பாமோலிவ் நிறுவனம் 2030ம் ஆண்டை இலக்காக கொண்டு கிராமப்புற சந்தையில் தீவிர விரிவாக்கம், நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்காக அறிவியல் அடிப்படையிலான புதிய தயாரிப்புகளில் கவனம் செலுத்துகிறது என அதன் நிர்வாக இயக்குநர் பிரபா நரசிம்மன் தெரிவித்துள்ளார். டூத் பேஸ்ட், டூத் பிரஷ் போல இதர பொருட்களின் வர்த்தகமும் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ரூ.10,830 கோடி ஒப்பந்தத்தை பெற்ற ஹெச்.சி.எல்.,
ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்ட உலகின் 'முன்னணி 50 நிறுவன'ங்களில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நிறுவனம் ஒன்றிடமிருந்து, கிட்டத்தட்ட 10,830 கோடி ரூபாய் மதிப்பிலான தகவல் தொழில்நுட்ப சேவை ஒப்பந்தத்தை ஹெச்.சி.எல்.டெக் நிறுவனம் பெற்றுள்ளது. ஏ.ஐ., அடிப்படையில், வாடிக்கையாளர் நிறுவனத்தின் உலகளாவிய டிஜிட்டல் பணியிடம் மற்றும் நெட்வொர்க் செயல்பாடுகள் நவீனமயமாக்கப்படும். இம்மாதம் முதல் 2031 டிசம்பர் வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும்.
1,000 கன்டெய்னர்களுக்கு ஆர்டர் வழங்கிய மெர்ஸ்க்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 1,000 சரக்கு கன்டெய்னர்களுக்கு, டென்மார்க் கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெர்ஸ்க் முதன்முறையாக ஆர்டர் வழங்கியுள்ளது. இந்தியாவின் டி.சி.எம். கன்டெய்னர்ஸ் நிறுவனம் இவற்றை தயாரித்துள்ளது. ஆண்டுதோறும் 4 முதல் 5 லட்சம் கன்டெய்னர்களை மெர்ஸ்க் நிறுவனம் வாங்கி வருகிறது. மேலும் பல கன்டெய்னர்களை கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
