தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஆக 05, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சொந்த தொழில்நுட்பத்தில் பேட்டரி தயாரிக்கும் டாடா

டாடா குழுமத்தின் பேட்டரி தயாரிப்பு பிரிவான 'அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ்' குஜராத் மாநிலம், சானந்தில் அமைத்து வரும் ஆலையில் லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி செல்கள் உற்பத்திக்கான சோதனை உற்பத்தி மையத்தை அமைத்து வருகிறது. இதன் வாயிலாக, வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சாராமல், சொந்த தொழில்நுட்பத்தில் பேட்டரி செல்களை தயாரிக்கும் திறனை இந்நிறுவனம் உருவாக்க உள்ளது.

ரூ.95,000 கோடியை கடந்த ஆப்பிள் நிறுவன விற்பனை

ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் கடந்த நிதியாண்டில் முதல் முறையாக 95,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு விற்பனையை பதிவு செய்துள்ளது. பிரீமியம் மின்னணு சாதனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதும், நம் நாட்டில் இந்நிறுவனம் தனது சில்லரை விற்பனை மையங்களை விரிவுபடுத்தி வருவதும், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் சக்கரம் தயாரிக்க கூட்டணி அமைக்கும் ஜூபிடர்

ஜூபிடர் வேகன்ஸ் நிறுவனம், இத்தாலியின் லுச்சினி ஆர்.எஸ்., ஹோல்டிங் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் ஒருங்கிணைந்த ரயில் சக்கரம் தயாரிப்பு தளத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கூட்டணி வாயிலாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ரயில்வே மற்றும் ஏற்றுமதி சந்தைகளின் தேவையை பூர்த்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சொந்த தொழில்நுட்பத்தில் பேட்டரி தயாரிக்கும் டாடா

டாடா குழுமத்தின் பேட்டரி தயாரிப்பு பிரிவான 'அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ்' குஜராத் மாநிலம், சானந்தில் அமைத்து வரும் ஆலையில் லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரி செல்கள் உற்பத்திக்கான சோதனை உற்பத்தி மையத்தை அமைத்து வருகிறது. இதன் வாயிலாக, சொந்த தொழில்நுட்பத்தில் பேட்டரி செல்களை தயாரிக்கும் திறனை இந்நிறுவனம் உருவாக்கும்.

ரூ.95,000 கோடியை கடந்த ஆப்பிள் நிறுவன விற்பனை

ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் கடந்த நிதியாண்டில் முதல் முறையாக 95,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு விற்பனையை பதிவு செய்துள்ளது. பிரீமியம் மின்னணு சாதனங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதும், நம் நாட்டில் இந்நிறுவனம் தனது சில்லரை விற்பனை மையங்களை விரிவுபடுத்தி வருவதும், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us