தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஆக 21, 2026 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவின் 'எவர்கிராண்டே' நிறுவனருக்கு ஆயுள் தண்டனை



சீனாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே குழும நிறுவனர் ஹுய் கா யானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடைய 56 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நிதி மோசடி, சட்டவிரோதமாக பணம் திரட்டியது, பங்கு வெளியீட்டில் மோசடி உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், தொடர்புடைய நிறுவனங்களுக்கு சுமார் 22,800 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடன் வர்த்தகத்தில் ஆதித்ய பிர்லா கேப்பிடல்



ஆதித்ய பிர்லா கேப்பிடல் நிறுவனம், தங்கக் கடன் வழங்கும் வர்த்தகத்தில் புதிதாக நுழைந்துள்ளது. பாதுகாப்பான கடன் வழங்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் வகையில், நடப்பு நிதியாண்டில் படிப்படியாக 200 முதல் 300 தங்கக் கடன் கிளைகள் வரும் 2027 மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் தங்கக் கடனுக்காக நாடு முழுதும் சுமார் 1,000 கிளைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபாய் விமான நிலைய ஒப்பந்தம் எல் அண்டு டி., பெற்றது



எல் அண்டு டி., நிறுவனம், ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து, துபாயின் அல் மக்துாம் சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி பயணிகள் போக்குவரத்து அமைப்பை உருவாக்க 5,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அவ்வகையில் இத்திட்டத்தில் எல் அண்டு டி.,க்கு கிடைத்த 3வது ஒப்பந்தம். திட்டம் முழுமையடைந்தால், ஆண்டுக்கு 26 கோடி பயணிகள் மற்றும் 1.2 கோடி டன் சரக்குகளை கையாளும் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக அல் மக்துாம் உருவாகும்.

564 கோடி ருபாய் கடனை குறைத்த கல்யாண் ஜுவல்லர்ஸ்



கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம், 2025 - 26ல் இந்தியாவில் தங்கம் அல்லாத உலோக கடனை கிட்டத்தட்ட 564 கோடி ரூபாய் குறைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், இந்த கடன் 1,300 கோடி ரூபாயில் இருந்து 300 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்த முக்கியமல்லாத ரியல் எஸ்டேட் சொத்துக்களை மீட்டுள்ள நிறுவனம், அவற்றை விற்பனை செய்து பணமாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.

ராணுவ கேன்டீன்களில் 'ஏதர்' மின் ஸ்கூட்டர் வாங்கலாம்



ராணுவ கேன்டீனில், ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களை 'கேன்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மென்ட்' இணையதளம் வாயிலாக வாங்கும் வசதி விரைவில் கிடைக்க உள்ளது. இவ்வாண்டு செப்டம்பரில் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதர் 450 மற்றும் ரிஸ்டா வரிசைகளில் 8 மாடல்கள் அத்தளத்தில் இடம்பெறவுள்ளன. விலை சலுகையும் உண்டு. சி.எஸ்.டி., தளத்தில் இடம்பெற்றுள்ள நாட்டின் முதல் 2 மின்சார இருசக்கர வாகன நிறுவனங்களில் ஏதரும் ஒன்றாகும்.

கோத்தாரி சுகர்ஸ் இணைப்பு திட்டத்துக்கு தடையில்லா சான்று



கோத்தாரி சுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் நிறுவனம், கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்கான திட்டத்துக்கு தேசிய பங்கு சந்தையிடம் இருந்து தடையில்லா சான்றை பெற்றுள்ளது. இரு நிறுவனங்களின் பங்குதாரர்கள் மற்றும் கடன்தாரர்களையும் உள்ளடக்கிய இந்தத் திட்டம், நிறுவனங்கள் சட்டம் 2013-ன் 230 - 232 பிரிவுகளின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us