தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஆக 27, 2026 07:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 07:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதானிக்கு ரூ.4700 கோடி மின்சார பகிர்மான ஆர்டர்



கர்நாடகாவில் உற்பத்தியாகும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை மகாராஷ்டிராவின் முக்கிய மின் தேவையுள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லும் 4,700 கோடி ரூபாய் மதிப்பிலான மின் பகிர்மான திட்டத்தை அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திட்டத்தில் சதாராவில் 765/400 கே.வி. துணை மின் நிலையம், கொல்ஹாபூர் - சதாரா 765 கே.வி. இரட்டை சுற்று மின் பாதை உள்ளிட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன. 36 மாதங்களில் திட்டம் நிறைவேற்றப்படும்.

எஸ்.பி.ஐ., வீட்டுக்கடன் ரூ.10 லட்சம் கோடி தாண்டும்



எஸ்.பி.ஐ., வங்கி வழங்கிய வீட்டுக் கடன் நடப்பு காலாண்டில் 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என அதன் தலைவர் சி.எஸ். செட்டி தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் இது 9 லட்சம் கோடி ரூபாயை கடந்தது. வீட்டுக் கடன் சந்தையில் எஸ்.பி.ஐ.,க்கு சுமார் 28 சதவீத பங்கு உள்ளது. நாடு முழுவதும் 460-க்கும் மேற்பட்ட வீட்டுக் கடன் மையங்களையும் இவ்வங்கி கொண்டுள்ளது. வீட்டுக் கடன் துறையின் மொத்த நிலுவைத் தொகை 30 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ள நிலையில், இத்தொகையை பத்திரங்களாக மாற்றி நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எஸ்.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.

வோடபோன் ஐடியா- பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் பகிர ஒப்பந்தம்



வோடபோன் ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல்., அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் நெட்வொர்ககை பகிர்ந்துகொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, இரு நிறுவனங்களும் ரோமிங் வசதி, தொலைத்தொடர்பு கோபுரங்கள், ஆப்டிக்கல் பைபர் உள்ளிட்ட கட்டமைப்புகளை பகிர்ந்து கொள்ள உள்ளன. கிராமப்புறங்களில் பி.எஸ்.என்.எல்., சேவையை விரிவுபடுத்தவும் இது உதவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us