UPDATED : செப் 15, 2026 03:38 AM
ADDED : செப் 15, 2026 03:24 AM

1 லட்சத்தை கடந்தது மாருதியின் ஜப்பான் ஏற்றுமதி
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஜிம்னி, பிராங்க்ஸ் மற்றும் இ - விட்டாரா கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. பிராங்க்ஸ் ஏற்றுமதி 2024 ஆகஸ்டிலும், ஜிம்னி ஏற்றுமதி 2024 டிசம்பரிலும் தொடங்கியது. ஜப்பான், மாருதியின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
ரூ.2,000 கோடி முதலீடு லுாமினஸ் பவர் திட்டம்
லுாமினஸ் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஒடிஷாவின் கோபால்பூர் மற்றும் அங்குலில் சோலார் செல் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகளை அமைத்து வருகிறது. இதற்காக 2025 முதல் 2027 வரை கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுவதாக கிரிசில் தெரிவித்துள்ளது. இரு ஆலைகளும் 2027ல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னாப்ரிக்க நிறுவனத்தை வாங்குகிறது சோலார் இண்டஸ்ட்ரீஸ்
சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா நிறுவனம், தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ஓம்னியா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தை கிட்டத்தட்ட 12,951 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், சுரங்கம், தொழில்துறை வெடிபொருட்கள் உள்ளிட்ட துறைகளில் சோலார் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளை விரிவுபடுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 லட்சத்தை கடந்தது மாருதியின் ஜப்பான் ஏற்றுமதி
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஜிம்னி, பிராங்க்ஸ் மற்றும் இ - விட்டாரா கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது. பிராங்க்ஸ் ஏற்றுமதி 2024 ஆகஸ்டிலும், ஜிம்னி ஏற்றுமதி 2024 டிசம்பரிலும் தொடங்கியது. ஜப்பான், மாருதியின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக உள்ளது.
ரூ.2,000 கோடி முதலீடு 'லுாமினஸ் பவர்' திட்டம்