தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


ADDED : செப் 16, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இணை நிறுவனத்தில் முதலீடு பி.ஹெச்.இ.எல்., ஒப்புதல்




பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், என்.டி.பி.சி., நிறுவனத்துடன் இணைந்து தாங்கள் உருவாக்கி நடத்தி வரும் 'என்.டி.பி.சி., பி.ஹெச்.இ.எல்., பவர் புராஜெக்ட்ஸ்' நிறுவனத்தில் மேலும் 65 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. 2026 - 27 நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் இம்முதலீடு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் காஸ்டிங் ஆலை அமைக்கிறது உனோ மிண்டா


வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான உனோ மிண்டா, இந்தியாவில் 4 உற்பத்தித் திட்டங்களுக்கு கிட்டத்தட்ட 1,415 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. ஹரியானாவின் கர்கோடாவில் இருசக்கர வாகன அலாய் வீல் ஆலை, தமிழகத்தின் ஓசூரில் அலுமினியம் காஸ்டிங் ஆலை, பெங்களூரில் உற்பத்தி திறன் விரிவாக்கம், மஹாராஷ்டிராவில் புதிய ஆலை அமைக்கப்பட உள்ளன.

புரதப்பொடி சந்தையில் தடம் பதிக்கிறது ஹார்லிக்ஸ்


ஹார்லிக்ஸ் நிறுவனம், புளிக்கவைக்கப்பட்ட ஈஸ்ட் புரதத்தை அடிப்படையாக கொண்ட புதிய புரதப்பொடியை அறிமுகப்படுத்தியுள்ளதன் வாயிலாக அத்துறையில் முதல்முறையாக தடம் பதித்துள்ளது. ஒரு 36 கிராம் பாக்கெட்டில் 24 கிராம் புரதம், 4 கிராம் ப்ரீபயாடிக் நார்ச்சத்து இடம்பெற்றுள்ளன. சாக்லேட், காபி உள்ளிட்ட சுவைகளில் இவை கிடைக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us