தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்

நிறுவன செய்திகள்


UPDATED : அக் 06, 2026 10:40 AM

ADDED : அக் 05, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:40 AM ADDED : அக் 05, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ. 11,000 கோடி முதலீடு ; செயின்ட்-கோபேன் திட்டம்



அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் 11,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, பிரான்ஸ் நாட்டு கண்ணாடி உற்பத்தி நிறுவனமான செயின்ட்-கோபேன் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கண்ணாடி வர்த்தகம் மட்டுமின்றி, கட்டுமானங்களின் தரம் மற்றும் முதலீட்டு மதிப்பை உயர்த்தும் ரசாயனங்களுக்கான துறைகளில் விரிவாக்கம் மேற்கொள்வதற்காக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெயின்ட் பிரிவை விற்கும் 'அக்சோ நோபல்'



தனது வர்த்தக பிரிவுகளை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், தனது அலங்கார பெயின்ட் வர்த்தகத்தை நிப்பான் பெயின்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் 'அக்சோ நோபல்' நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியா, மலேசியா, உள்ளிட்ட ஏழு நாடுகளில் அக்சோ நோபலின் அலங்கார பெயிண்ட் வர்த்தகத்தை உள்ளடக்கியுள்ளதாகும்.

ஹீரோ பியூச்சர் எனர்ஜீஸ் பங்குகளை வாங்கும் சுமிடோமோ



ஜப்பானை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான சுமிடோமோ கார்ப்பரேஷன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ஹீரோ பியூச்சர் எனர்ஜீஸின் 49 சதவீத பங்குகளை வாங்க உள்ளது. ஹீரோ பியூச்சர் எனர்ஜீஸ், கர்நாடக மாநிலத்தில் 500- மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மற்றும் சூரிய மின் நிலையத்துடன், பேட்டரி மின் சேமிப்பு திட்டத்தை உருவாக்கி வருகிறது.

'செயில்' உற்பத்தி 1 சதவீதம் உயர்வு



அரசுக்கு சொந்தமான 'செயில்' நிறுவனம், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில் கச்சா ஸ்டீல் உற்பத்தியில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் அதிகமாக 83.9 லட்சம் டன் ஸ்டீல் உற்பத்தி செய்துள்ளது. இந்த மாதங்களில் நிறுவனத்தின் ஹாட் மெட்டல் உற்பத்தி 2 சதவீதம் உயர்ந்து 1.20 கோடி டன்னாக உள்ளது.

செலவுகளை குறைக்கிறது ஹோண்டா மோட்டார்



டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள புதிய கூட்டணியின் வாயிலாக, ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது செலவுகளை ஐந்தில் ஒரு பங்கு வரை குறைக்கவும், வாகன மேம்பாட்டுக்கான காலத்தை பாதியாக குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. போட்டி அதிகரித்து வருவதால், தனித்து செயல்படும் அணுகுமுறையை இந்நிறுவனம் மறுபரிசீலனை செய்கிறது.

வர்த்தகத்தை சீரமைக்கும் கார்டெவா நிறுவனம்



அமெரிக்காவைச் சேர்ந்த கார்டிவா நிறுவனம், தனது விதை வர்த்தகத்தை தனி நிறுவனமாக பிரித்துள்ளது. இதையடுத்து, பயிர் பாதுகாப்பு துறையில் மட்டுமே கவனம் செலுத்தும் உலகளாவிய நிறுவனமாக கார்டிவா செயல்பட உள்ளது. பூச்சிக்கொல்லிகள், பயிர் பாதுகாப்பு துறைகளில் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் நிறுவனம் கவனம் செலுத்த உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us