தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/நிறுவன செய்தி

நிறுவன செய்தி

நிறுவன செய்தி


ADDED : ஆக 19, 2026 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெனிசுலாவில் செயல்படஓ.என்.ஜி.சி.,க்கு அனுமதி

வெனிசுலாவில் தனது செயல்பாடுகளை முழுமையாக மீண்டும் மேற்கொள்வதற்கான அனுமதியை அமெரிக்க அரசிடம் இருந்து ஓ.என்.ஜி.சி., பெற்றுள்ளது. இதன் வாயிலாக, அந்நாட்டில் ஓ.என்.ஜி.சி., மேற்கொண்டு வரும் எண்ணெய் முதலீடுகளுக்கான முக்கிய தடை நீங்கியுள்ளது. மேலும், வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாவ் பட்ரோல் பொம்மை அறிமுகப்படுத்தும் 'பன்ஸ்கூல்'

சென்னையை சேர்ந்த பொம்மை தயாரிப்பு நிறுவனமான பன்ஸ்கூல், பிரபலமான பாவ் பட்ரோல் கதாபாத்திரங்களை கொண்ட பொம்மைகளை உள்நாட்டிலேயே தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை பெற்றுள்ளது. கனடாவை சேர்ந்த பொம்மை மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஸ்பின் மாஸ்டர், நிறுவனத்திடமிருந்து இந்த உரிமத்தை பன்ஸ்கூல் பெற்றுள்ளது.

ஹிந்துஸ்தான் காப்பர்ரூ.7,000 கோடி முதலீடு

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர், அடுத்த 5 - 6 ஆண்டுகளில் 7,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. சுரங்கம் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்பட உள்ளது. நாட்டில் தாமிரத்துக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தனியார் கடன் துறையில் நுழைகிறது கோத்ரெஜ்

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனியார் கடன் துறையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதற்கான முதல் முதலீட்டு திட்டத்தின் வாயிலாக 2,000 கோடி ரூபாய் வரை திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு கடன் சேவை வழங்கும் இந்த புதிய பிரிவு, கோத்ரெஜ் குழுமத்தின் நிதிச் சேவை நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கவுர்மேட் பாப்கார்னிகா'புதிய சின்னம் அறிமுகம்

சென்னையை சேர்ந்த உலகின் 5வது மிகப்பெரிய பாப்கார்ன் மக்காச்சோள உற்பத்தி நிறுவனமான 'கவுர்மேட் பாப்கார்னிகா', தனது புதிய பிராண்டு அடையாள சின்னமாக 'தி ஹஸ்க்'ஐ நேற்று அறிமுகப்படுத்தியது. இனி கவுர்மேட் பாப்கார்னிகாவின் அனைத்து பாப்கார்ன் பைகளிலும், இந்த அடையாள சின்னம் இடம்பெறும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பட்டாபி ராம ராவ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us