'கம்ப்ரஸர்' கட்டுப்பாட்டால் ' ஏசி' தட்டுப்பாடு ஏற்படும்: நிறுவனங்கள் எச்சரிக்கை
'கம்ப்ரஸர்' கட்டுப்பாட்டால் ' ஏசி' தட்டுப்பாடு ஏற்படும்: நிறுவனங்கள் எச்சரிக்கை
ADDED : மே 17, 2026 04:18 AM

கொல்கட்டா: மத்திய அரசு 'கம்ப்ரஸர்'களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதித்து உள்ளதால், இந்த ஆண்டு இறுதியில் ' ஏசி' மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.
நடப்பு ஆண்டு முதல் 2 டன் வரை திறன் கொண்ட குளிர்சாதன பெட்டி கம்ப்ரஸர்களின் இறக்குமதி அளவை 40 சதவீதமாகவும் ' ஏசி' கம்ப்ரஸர்களின் இறக்குமதி அளவை 30 சதவீதமாகவும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையான டி.பி.ஐ.ஐ.டி., குறைத்து உள்ளது.
இது குறித்து ' ஏசி' மற்றும் குளிர்சாதன பெட்டி தயாரிப்பாளர்கள் கூறியதாவது:
அரசு கட்டுபாடு விதித்துள்ள 2 டன் வரை திறன் கொண்ட பிரிவில் தான் மொத்த விற்பனையில் 85 சதவீதம் நடக்கிறது. ஆனால், 2 டன்னுக்கு அதிகமான திறன் கொண்ட கம்ப்ரஸர்களை 90 சதவீதம் வரை இறக்குமதி செய்து கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 1.50 கோடி ' ஏசி' கம்ப்ரஸர்கள் தேவைப்படுகின்றன.
ஆனால் 70 முதல் 80 லட்சம் வரை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே போல் குளிர்சாதன பெட்டி பிரிவில் 1.45 முதல் 1.50 கோடி கம்ப்ரஸர்கள் தேவைப்படும் நிலையில், 85 முதல் 90 லட்சம் வரை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி ஆகின்றன.
எனவே, அவற்றின் இறக்குமதியை கட்டுப்பாடுகளால் ' ஏசி' மற்றும் குளிர்சாதன பெட்டிகளுக்கு தட்டுப்பாடு வரலாம்.
