தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எகிறிய ஏற்றுமதி கட்டண உயர்வு தவிக்கும் கொங்கு மண்டல உற்பத்தியாளர்கள்

எகிறிய ஏற்றுமதி கட்டண உயர்வு தவிக்கும் கொங்கு மண்டல உற்பத்தியாளர்கள்

எகிறிய ஏற்றுமதி கட்டண உயர்வு தவிக்கும் கொங்கு மண்டல உற்பத்தியாளர்கள்


UPDATED : அக் 26, 2026 05:29 PM

ADDED : அக் 26, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 05:29 PM ADDED : அக் 26, 2026 05:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடி காரணமாக, நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி, கோவை இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை அமைப்பான ஐ.சி.சி.ஐ., சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சவால்கள்:

*பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு

*கன்டெய்னர்களுக்கான தட்டுப்பாடு

*கப்பல்களின் வழித்தட மாற்றம்

*துறைமுகங்களில் ஏற்படும் நெரிசலால் சரக்கு வினியோகத்தில் தாமதம்.

*கடல்சார் காப்பீட்டு கட்டண உயர்வு

கோரிக்கைகள்:

*சரக்கு கட்டணங்களை முறைப்படுத்தி, முகவர்களின் கூடுதல் கட்டண வசூலை கட்டுப்படுத்த வேண்டும்.

*நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களின் குறைகளை தீர்க்க, சிறப்பு தீர்வு மையத்தை உருவாக்க வேண்டும்.

*கெட்டுப்போகும் பொருட்களுக்கு முன்னுரிமை அளித்து வினியோகம் செய்ய வேண்டும்.

*ஏற்றுமதி கடன்களை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“மேற்கு ஆசிய நெருக்கடியால் மூலப்பொருட்களின் வினியோகம் பாதிக்கப்பட்டு, ஆலைகளின் உற்பத்தி திறன் குறைந்துள்ளது. கன்டெய்னர் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வால், குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்ப முடிவதில்லை. இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தடையற்ற கடல்வழி போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்,”
- சி.துரைராஜ், தலைவர், கோவை ஐ.சி.சி.ஐ.,


சரக்கு கட்டணம்

தூத்துக்குடி – நியூயார்க்

முன்பு : ரூ.5.23 லட்சம்

தற்போது : ரூ.9.50 லட்சம்

விசாகபட்டினம் – லாஸ் ஏஞ்சல்

முன்பு : ரூ.5.70 லட்சம்

தற்போது : ரூ.10.45 லட்சம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us