தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'டைல்ஸ்' உற்பத்தி முடங்க வாய்ப்பு கட்டுமான துறையினர் அச்சம்

 'டைல்ஸ்' உற்பத்தி முடங்க வாய்ப்பு கட்டுமான துறையினர் அச்சம்

 'டைல்ஸ்' உற்பத்தி முடங்க வாய்ப்பு கட்டுமான துறையினர் அச்சம்


ADDED : மார் 06, 2026 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை : ஈரானில் தற்போது நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு வரத்து தடைபட்டுள்ளதால், குஜராத்தில் செராமிக் டைல்ஸ் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கட்டுமான துறையினர் தெரிவித்தனர்.

வீடு, அலுவலகம், வணிக வளாகம் என அனைத்து விதமான கட்டடங்களிலும் செராமிக் டைல்ஸ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.

இதற்கான மூலப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து, 1,100 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு வெப்பமூட்டுவதன் வாயிலாக டைல்ஸ் தயாரிக்கப்படுகிறது. இதில், நமது நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 75 சதவீத செராமிக் டைல்ஸ் தயாரிப்பு ஆலைகள் குஜராத்தில் செயல்படுகின்றன.

அனைத்து முக்கிய பிராண்டுகளுக்கும் குஜராத்தின் ேமார்பி மாவட்டத்தில் தயாரிப்பு பிரிவுகள் இயங்குகின்றன. இங்கு, 600க்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன.

இதன் தயாரிப்பில் வெப்பமூட்டுவதற்கு, புரோப்பேன் மற்றும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த எரிவாயுக்கள், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் நிலையில், தற்போதைய போக்குவரத்து தடை தொடர்ந்தால், டைல்ஸ் ஆலைகள் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

வீடு கட்டுவோர் அதிர்ச்சி இது குறித்து இந்திய கட்டுமான வல்லுநர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி ராமபிரபு கூறுகையில், “எரிபொருள் வராத நிலையில், பராமரிப்பு என்ற பெயரில் ஒரு வாரத்துக்கு உற்பத்தியை நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது நடந்தால், கட்டுமான திட்டங்களுக்கு செராமிக் கற்கள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும். இது டைல்ஸ் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். தற்போதைய நிலவரப்படி, தலா 40 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை டைல்ஸ் விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் விலை உயருமோ என வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,” என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us