தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கட்டுமான இயந்திர விற்பனை இரண்டு சதவீதம் குறைந்தது

 கட்டுமான இயந்திர விற்பனை இரண்டு சதவீதம் குறைந்தது

 கட்டுமான இயந்திர விற்பனை இரண்டு சதவீதம் குறைந்தது


ADDED : மே 10, 2026 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கடந்த நிதியாண்டில், கட்டுமான இயந்திரங்கள் விற்பனை, இரண்டு சதவீதம் குறைந்துள்ளதாக ஐ.சி.இ.எம்.ஏ., என்ற இந்திய கட்டுமான இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில், 1.40 லட்சம் கட்டுமான இயந்திரங்கள் விற்பனையான நிலையில், கடந்த நிதியாண்டில், 1.36 லட்சம் இயந்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், தாமதமான உட்கட்டமைப்பு திட்டங்கள், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம், இயந்திரங்கள் விலை மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை விற்பனை சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

கான்கிரீட், சாலை கட்டமைப்பு பொருட்களின் செயலாக்க இயந்திரங்களின் விற்பனையை தவிர இதர பிரிவுகளின் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. உள்நாட்டு விற்பனை குறைந்தாலும், ஏற்றுமதி 32 சதவீதம் உயர்ந்துள்ளது.

* கட்டுமான இயந்திர துறையில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது

* கட்டுமான இயந்திர சந்தை மதிப்பு 94,463 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது

* வரும் 2030க்குள் 50% அதிகரித்து, கிட்டத்தட்ட 1.39 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்ப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us