ADDED : மே 11, 2026 02:46 AM
புதுடில்லி: மேற்காசிய போர் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக, உலகளாவிய வினியோக தொடர் பாதிப்பால் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
இதனால், நுகர்வு பொருட்களை தயாரிக்கும் 'எப்.எம்.சி.ஜி.' நிறுவனங்கள், தங்களின் பொருட்களின் விலையை மீண்டும் உயர்த்த திட்டமிட்டுள்ளன.
இது குறித்து இத்துறையினர் கூறியதாவது:
'டாபர்' நிறுவனம் பொருட்களின் விலையை 4 சதவீதம் வரை ஏற்கனவே உயர்த்தியுள்ளது. 'பிரிட்டானியா', 10 ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களின் விலையை உயர்த்தவும், எடையைக் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
'ஹெச்.யு.எல்.,' நிறுவனம் பொருட்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதுதவிர,'வருண் பெவரேஜஸ்' நிறுவனம் வாடிக்கையாளர் தள்ளுபடியை குறைக்கத் தொடங்கியுள்ளதுடன், 'டாடா கன்ஸ்யூமர்', 'நெஸ்லே இந்தியா' ஆகிய நிறுவனங்களும் விலை உயர்வு வரக்கூடும் என்று அறிவித்திருக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
