பெருநிறுவன பணியாளர்கள் 'ஸ்டார்ட் அப்' துவக்க அழைப்பு
பெருநிறுவன பணியாளர்கள் 'ஸ்டார்ட் அப்' துவக்க அழைப்பு
ADDED : ஜன 10, 2026 01:18 AM

சென்னை : தமிழகத்தில், பெருநிறுவனங்களில் பணிபுரிவோரில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனம் துவக்க விரும்புவோருக்கு தேவைப்படும் உதவிகளை வழங்க, 'நெக்ஸ்ட் லீப்' எனப்படும் தொழில் விரைவாக்க பயிற்சி திட்டத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு நிறுவனத்தை துவக்கி, அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தேவைப்படும் முறையான வழிகாட்டுதல், முதலீட்டாளர்கள் தொடர்புகள், உத்திகள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட உதவிகளுக்காக ஏற்படும் செலவில், 90 சதவீதம் வரை அரசே ஏற்கும்.
தொழில் விரைவாக்க பயிற்சி திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கு, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க, குறைந்தது ஐந்து ஆண்டுகள், பெருநிறுவனத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். 'form.startuptn.in/NL' என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

