தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ பஞ்சு இறக்குமதி 62% அதிகரிப்பு

 பஞ்சு இறக்குமதி 62% அதிகரிப்பு

 பஞ்சு இறக்குமதி 62% அதிகரிப்பு


ADDED : ஜூன் 27, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: உள்நாட்டில் தட்டுப்பாடு காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு பஞ்சு இறக்குமதி 62 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு பருத்தி ஆண்டில் (அக்., 2025 - செப்., 2026) எதிர்பாராத விதமாக பஞ்சு வரத்து குறைந்துள்ளது. சீசன் முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தினசரி வரத்து, 10,000 பேல்களாகச் சரிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்க நுாற்பாலைகள் இறக்குமதிக்கு மாறின.

கடந்த 2025ம் ஆண்டில் (அக்., 19 முதல் டிச., 31 வரை) பஞ்சு இறக்குமதிக்கான வரி ரத்து செய்யப்பட்டதும் இதற்கு முக்கியக் காரணம்.

இந்திய ஏற்றுமதி வர்த்தக ஆலோசகர்கள் கூறுகையில்,'பஞ்சு, நுால், துணி போன்ற மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு மாறாக, ஜவுளி ஏற்றுமதி செய்வதை அரசு ஊக்குவிக்கிறது. கடந்த நிதியாண்டில், பருத்தி நுால், துணி மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் மட்டும், ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 399 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.

பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், இறக்குமதி வரி விலக்கு சலுகை கிடைத்ததால், கடந்தாண்டில், 62 சதவீதம் அளவுக்கு பஞ்சு இறக்குமதி அதிகரித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து முதல்தர பருத்தி அதிகம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது' என்றனர். ---

இறக்கமதி நிலவரம் (ரூபாயில்) பொருள் 2024 - 25 2025 - 26 ஜூலை வரை உயர்வு பருத்தி மற்றும் கழிவு பஞ்சு 10,326 கோடி 16,735 கோடி 62% ஜவுளி நுால் மற்றும் துணி ரகங்கள் 20,938 22,984 கோடி 9.77%

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us