படைப்பாற்றல் பொருட்கள் ஏற்றுமதி 7.30% அதிகரிப்பு
படைப்பாற்றல் பொருட்கள் ஏற்றுமதி 7.30% அதிகரிப்பு
ADDED : டிச 27, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: நாட்டின் படைப்பாற்றல் பொருட்கள் ஏற்றுமதி: இந்தியாவின் பேஷன் அக்சஸரீஸ், நகைகள், தரைவிரிப்புகள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்ட படைப்பாற்றல் பொருட்கள் சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததால், ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது.
இந்திய படைப்பாற்றல் பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையாக இருந்த அமெரிக்காவை முந்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து யு.ஏ.இ.,வுக்கு ஏற்றுமதி, கடந்தாண்டு 23.20 சதவீதத்தில் இருந்து, நடப்பாண்டு 31 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
அதே நேரம், வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி 34ல் இருந்து 26.10 சதவீதமாக குறைந்துள்ளது. பேஷன் அக்சஸரீஸ், நகைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

