sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 தினசரி பஞ்சு வரத்து தொடர் சரிவு தேவையை சமாளிப்பதில் சிக்கல்

/

 தினசரி பஞ்சு வரத்து தொடர் சரிவு தேவையை சமாளிப்பதில் சிக்கல்

 தினசரி பஞ்சு வரத்து தொடர் சரிவு தேவையை சமாளிப்பதில் சிக்கல்

 தினசரி பஞ்சு வரத்து தொடர் சரிவு தேவையை சமாளிப்பதில் சிக்கல்


ADDED : மார் 05, 2026 01:23 AM

Google News

ADDED : மார் 05, 2026 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தினசரி பஞ்சு வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க வேண்டுமென, ஜவுளித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

நடப்பு பருத்தி ஆண்டில் (2025 அக்., - 2026 செப்.,) வழக்கமான பஞ்சு மகசூல் குறையும் என்றும், இந்திய பருத்தி கழகம் பஞ்சு இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும், மத்திய ஜவுளித் துறை கமிஷனரகம் அறிவுறுத்தியது. அதன்படி, சீசன் துவங்கியதில் இருந்தே, இந்திய பருத்தி கழகம், பஞ்சு கொள்முதலை துவக்கியது.

உள்நாட்டு நுாற்பாலைகளுக்கான விற்பனையையும் துவக்கி விட்டது. கடந்த ஐந்து மாதங்களில், 168 லட்சம் பேல்கள் (ஒரு பேல் - 170 கிலோ) அளவுக்கு பஞ்சு விற்பனை நடந்துள்ளது.

தெலுங்கானா பஞ்சு வரத்து குறைந்து, மஹாராஷ்டிரா பஞ்சு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், 9.37 லட்சம் பேல்கள் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''விலை உயர வாய்ப்பு இருக்கலாம் என கருதி, விவசாயிகளும் பஞ்சை விற்பனைக்கு எடுத்து வருவது குறைந்துள்ளது.

தினசரி பஞ்சு வரத்து, இரண்டு லட்சம் பேல்களாக இருந்தது. கடந்த ஒரு வாரமாக, ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்து விட்டது. நடப்பு சீசனில் பஞ்சு வரத்து சரிவால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக, பஞ்சு இறக்குமதி வரி 11 சதவீதத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.

பஞ்சு வரத்து விபரம்:

ஆண்டு பேல்

2025

அக்., 13,85,500

நவ., 30,26,700

டிச., 56,12,000

2026

ஜன., 43,50,100

பிப்., 24,18,600

மொத்த வரத்து: 1,67,92,900

மாநிலங்களில் பஞ்சு வரத்து

மாநிலம் பேல்

குஜராத் 4,67,000

தெலுங்கானா 3,56,000

கர்நாடகா 1,92,000

ஆந்திரா 1,59,000

ம.பி., 1,50,000

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், தமிழகம் 60,000






      Dinamalar
      Follow us