உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 25, 2026 12:00 AM
ADDED : நவ 24, 2026 11:16 PM

அ நிறம் | அளவு
நாமக்கல்: முட்டை விலையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவால், தினமும் விலை நிர்ணயம் செய்வதை நிறுத்திய ‘நெக்’, நவ., 28 வரை, தற்போதைய விலையே நீடிக்கும் என அறிவித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில், பறவை காய்ச்சல் தாக்கம், சபரிமலை சீசன் போன்ற காரணங்களால், முட்டை, கோழி இறைச்சி நுகர்வு பரவலாக குறைந்துள்ளது. அதன்காரணமாக, முட்டை கொள்முதல் விலை தொடந்து சரிந்து வருகிறது.
இதன் காரணமாக, தினமும் விலை நிர்ணயம் செய்வதை, நேற்று முன்தினம் முதல், நெக் எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, நிறுத்தி உள்ளது. வரும், 28 வரை, தற்போதைய விலையான, 540 காசே நீடிக்கும் என அறிவித்துள்ளது.
