தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'செமிகண்டக்டர்' திறன் மையம் புதிதாக 'டெண்டர்' கோர முடிவு

 'செமிகண்டக்டர்' திறன் மையம் புதிதாக 'டெண்டர்' கோர முடிவு

 'செமிகண்டக்டர்' திறன் மையம் புதிதாக 'டெண்டர்' கோர முடிவு


ADDED : ஜூன் 03, 2026 02:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 02:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில், 'செமி கண்டக்டர்' வடிவமைப்பு மற்றும் சோதனைக்கான சிறப்பு திறன் மையத்தை, புதிய 'டெண்டர்' கோரி அமைக்க, 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டில், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் வாகனங்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே, செமி கண்டக்டர் துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, 'தமிழக செமி கண்டக்டர் இயக்கம் - 2030' என்ற ஐந்து ஆண்டு திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, செமி கண்டக்டர் மற்றும் வடிவமைப்பு சோதனைக்கான சிறப்பு திறன் மையத்தை, கூட்டு நிறுவனத்துடன் இணைந்து அமைக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் மையத்தை அமைக்க டெண்டர் கோரப்பட்டது.

மொத்த செலவில், 40 சதவீதம் அதிகபட்சம், 75 கோடி ரூபாய் வரை டிட்கோ வழங்கும். டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், டிட்கோ எதிர்பார்த்த தொழில்நுட்ப விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் தற்போது, ஆட்சி மாற்றத்தால், புதிய ஆட்சியாளர்களிடம் தெரிவித்து, அதற்கு ஏற்ப, புதிய டெண்டர் கோர, 'டிட்கோ' நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us