உள்ளடக்கத்திற்கு செல்ல

அட்டை பெட்டி உற்பத்தியை 9, 10 தேதிகளில் நிறுத்த முடிவு
அட்டை பெட்டி உற்பத்தியை 9, 10 தேதிகளில் நிறுத்த முடிவு
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 10:44 PM

அ நிறம் | அளவு
கரூர்: மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வையடுத்து, வரும் 9, 10 ஆகிய நாட்களில், அட்டைப் பெட்டி உற்பத்தியை நிறுத்த இருப்பதாக கரூரில் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மு க்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலை, கடந்த இரண்டு மாத ங்களில் மட்டும் டன்னுக்கு, 1,000 ரூபாய் வீதம், 8 முறை உயர்த்தப்பட்டுள்ளதோடு, இதர மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உய ர்ந்து ள்ளது. மூலப்பொருட்களான காகிதம் ரொக்கத்திற்கு மட்டுமே கிடைக்கும் சூழலில், தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் மின் கட்டணமும் உயர்ந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக, வரும், 9, 10ம் தேதிகளில், அட்டைப் பெட்டி உ ற்பத்தியை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
