24 மணி நேரத்தில் டெலிவரி 'இந்தியா போஸ்ட ் ' திட்டம்
24 மணி நேரத்தில் டெலிவரி 'இந்தியா போஸ்ட ் ' திட்டம்
ADDED : அக் 18, 2025 01:48 AM

புதுடில்லி: இந்தியா போஸ்ட் நிறுவனம், வரும் ஜனவரி மாதம் முதல், 24 மணி நேரத்துக்குள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தபால் டெலிவரி சேவையை துவங்க உள்ளதாக, மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மறு நாளே பார்சல் டெலிவரி செய்யும் சேவை யும் துவங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது வரை, பார்சல் அனுப்பினால் அது சென்றடைய 3 - 5 நாட்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“வரும் ஜனவரி மாதம் முதல், இந்தியா போஸ்டில் 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேரத்துக்குள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஸ்பீட் போஸ்ட் சேவை துவங்கப்பட உள்ளது. பார்சலை பெற்ற மறு நாளே அதை டெலிவரி செய்யும் சேவையும் துவங்கப்பட இருக்கிறது. வரும் 2029க்குள், இந்தியா போஸ்ட் நிறுவனத்தை செலவு மையத்திலிருந்து லாப மையமாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது,” என அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.