ADDED : டிச 02, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவம்பரில் 40 சதவீதம் அதிகரித்த டீசல் விற்பனை
க டந்த நவம்பரில், நாட்டின் டீசல் விற்பனை கணிசமாக அதிகரித்தது. அக்., மாதத்தில் 67.90 லட்சம் டன் டீசல் விற்ற நிலையில், நவம்பரில் அது 40 சதவீதம் உயர்ந்து 85.50 லட்சம் டன் ஆனது.
இது கடந்த ஆறு மாதங்களில் இல்லாத உயர்வு. ஜி.எஸ்.டி., குறைப்பால் பொருட்கள் விற்பனை உயர்வால் சரக்கு போக்குவரத்து அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
நவம்பரில் பெட்ரோல் விற்பனை 2.19 சதவீதம் அதிகரித்து 35 லட்சம் டன்னாக இருந்தது. விமான எரிபொருள் விற்பனை 4.70 சதவீதம் அதிகரித்து 7.83 லட்சம் டன் ஆகவும், சமையல் எரிவாயு விற்பனை 7.62 சதவீதம் அதிகரித்து 30 லட்சம் டன் ஆகவும் இருந்தது.

