உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 29, 2024 01:44 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி,:பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனமும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனமும், தங்களது இந்திய ஊடக செயல்பாடுகளை இணைத்து, 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளன.
கூட்டுமுயற்சியில் உருவாக்கப்படும் புதிய நிறுவனத்தில், ரிலையன்ஸ் குழுமம் 63 சதவீதமும் டிஸ்னி நிறுவனம் 36 சதவீத பங்கு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒ.டி.டி., வணிகத்தின் வளர்ச்சிக்காக, கிட்டத்தட்ட 11,500 கோடி ரூபாயை ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீடா அம்பானி, கூட்டுமுயற்சி நிறுவன தலைவராகவும், டிஸ்னி இந்தியாவின் முன்னாள் தலைவர் உதய் சங்கர் துணைதலைவராகவும் பதவி வகிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
