தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ இந்தியாவில் இருந்து வெளியேறும் தோஹா வங்கி

 இந்தியாவில் இருந்து வெளியேறும் தோஹா வங்கி

 இந்தியாவில் இருந்து வெளியேறும் தோஹா வங்கி


ADDED : மார் 29, 2026 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,:இந்தியாவில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கத்தாரை சேர்ந்த தோஹா வங்கி, நம் நாட்டில் தனது கிளை செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது.

இது குறித்து வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் எங்களது தொழில் வியூகத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, கிளைகளின் செயல்பாடுகளை படிப்படியாக குறைத்து கொண்டு வெளியேற உள்ளோம். இதற்கு தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை ரிசர்வ் வங்கி மற்றும் பிற அமைப்புகளிடம் இருந்து பெற திட்டமிட்டு உள்ளோம்.

மும்பை மற்றும் கொச்சியில் உள்ள எங்கள் கிளைகளை மூடிவிட்டு, இங்கு இனி ஒரு பிரதிநிதி அலுவலகமாக மட்டுமே செயல்பட உள்ளோம். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்த விபரங்கள் கத்தார் பங்குச்சந்தையிலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாறிய திட்டம்

கடந்த 2016 வாக்கில், இந்தியாவில் துணை நிறுவனம் அமைக்கவும், வளைகுடா நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண வினியோக முறையை வலுப்படுத்தவும் தோஹா வங்கி திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது சர்வதேச அளவில் வங்கி எடுத்துள்ள வியூக மாற்றங்களின் ஒரு பகுதியாக, இந்த வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us