தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'சர்க்கரை விற்பனையில் இரட்டை விலை தேவை'

 'சர்க்கரை விற்பனையில் இரட்டை விலை தேவை'

 'சர்க்கரை விற்பனையில் இரட்டை விலை தேவை'


ADDED : ஜூன் 14, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 02:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் சர்க்கரை நுகர்வில், 60-65 சதவீதம், தொழில்துறையினரே பயனடைவதால், சில்லரை கொள்முதல் வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் இரட்டை விலை முறையை கொண்டு வர வேண்டும் என்று சர்க்கரை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுதும் சர்க்கரை விலையை கட்டுப்பாட்டில் வைக்க குறைந்தபட்ச விற்பனை விலையை மத்திய அரசே நிர்ணயிக்கிறது.

சில்லரை விலை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் இந்த விலையால், 60 -65 சதவீதம் தொழில் துறையினரே பயனடைகின்றனர். உள்நாட்டு மக்கள் பயன்பாட்டுக்காக நிர்ணயிக்கப்படும் இந்த விலையானது, தொழில்துறையினருக்கே அதிகம் பயன்படுகிறது.

அதனால், இரட்டை விலை முறையை கொண்டு வர வேண்டும். இதன் வாயிலாக உள்நாட்டில் மக்கள் நேரடியாக பயன்படுத்தும் சர்க்கரைக்கு ஒரு விலையும், தொழில்துறையினருக்கு ஒரு விலையும் நிர்ணயிக்க வேண்டும்.

இதனால் நாட்டின் சர்க்கரை நுகர்வில் பெரிய மாற்றம் ஏற்படும். சர்க்கரை ஆலைகளுக்கு வருமானம் கூடும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us