வடிவமைப்பு சட்டத்தில் திருத்தம் பரிந்துரை செய்தது டி.பி.ஐ.ஐ.டி.,
வடிவமைப்பு சட்டத்தில் திருத்தம் பரிந்துரை செய்தது டி.பி.ஐ.ஐ.டி.,
ADDED : ஜன 29, 2026 01:10 AM

புதுடில்லி: புதிய வடிவமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில், வடிவமைப்புக்கான 'டிசைன்' சட்டத்தை மேலும் பயனுள்ளதாக்கும் வகையில், அதில் சில திருத்தங்களை, டி.பி.ஐ.ஐ.டி., எனப்படும் தொழில் மற்றும் உள்வர்த்தக மேம்பாட்டு துறை பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகளை சுற்றறிக்கையாக வெளியிட்டு, இது தொடர்பான பொதுமக்கள் கருத்தையும் டி.பி.ஐ.ஐ.டி., கேட்டுள்ளது.
சுற்றறிக்கையின் விபரம்: வடிவமைப்பு தொடர்பான தற்போதைய சட்ட கட்டமைப்பு, துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்களை போதுமான அளவில் கையாளவில்லை.
இதனால், நிறுவனங்களுக்கு நிச்சயமின்மை ஏற்படுகிறது. சட்டத்தின் தற்போதைய வடிவம் நவீன புதுமைகளுடன் இணைந்து செல்ல முடியாத வகையில் உள்ளது.
எனவே, வடிவமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் தேவை.
'விர்ச்சுவல் டிசைன்' எனப்படும் மெய்நிகர் வடிவமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க, வடிவமைப்பு சட்டத்தில், 'பொருள்' 'வடிவமைப்பு' ஆகிய சொற்களுக்கான வரையறை யில் கணிசமான மாற்றங்கள் வே ண்டும்.
தற்போது அது அதிகளவில் டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்துள்ளது.
இந்த மாற்றங்களின் வா யிலாக, மெய்நிகர் வடிவமைப்புகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியும்.
கண்டுபிடிக்கப்பட்ட வடிவமைப்பை பொதுவெளியில் வெளியிடுவதை, 30 மாதங்கள் வரை தாமதப்படுத்தும் விருப்ப தேர்வை வடிவமைப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டும்.
தனியுரிமை பாதுகாப்பு
தயாரிப்பு பொருள்களின் வடிவம், முறை, ஆபரண வார்ப்பு ஆகியவற்றின் தனியுரிமை பாதுகாப்புக்கு டிசைன் சட்டம் உள்ளது. இதில் பதிவு பெறுவதால், காப்பியடித்தல், போலி தயாரிப்பை தவிர்க்கவும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் வழி உள்ளது.

