UPDATED : ஜூலை 18, 2025 12:43 AM
ADDED : ஜூலை 18, 2025 12:40 AM

அறிமுகம்
ஜோஹோ நிறுவனம், அதன் தயாரிப்புகளை பயன்படுத்தும் நிறுவனங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எல்.எல்.எம்., எனும் லார்ஜ் லேங்குவேஜ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, பேச்சை உரையாக மாற்றக் கூடிய திறன் பெற்றது என ஜோஹோ தெரிவித்துள்ளது. மேலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசினால், உரையாக மாற்றக்கூடிய தானியங்கி பேச்சு அங்கீகார மாதிரிகளையும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
விரைவில் இன்னும் சில இந்திய மற்றும் ஐரோப்பிய மொழிகளில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
ஒப்பந்தம்
மின்னணு பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர் தயாரிப்பில் இணைந்து செயல்பட, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் ஜெர்மனியைச் சேர்ந்த பாஷ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன்படி, விரைவில் அசாம் மற்றும் குஜராத் மாநிலங்களில் அமைக்கப்படவுள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஆலைகளில், சிப் பேக்கேஜிங் மற்றும் தயாரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |


