UPDATED : ஜூலை 18, 2025 12:33 AM
ADDED : ஜூலை 18, 2025 12:32 AM

கூட்டு
டிக்சன் டெக்னாலஜிஸ், சிக்னிபை இன்னோவேஷன்ஸ் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து, 50:50 என்ற விகிதத்தில், லைட்டானியம் டெக்னாலஜிஸ் என்ற புதிய நிறுவனத்தை துவங்கி உள்ளது. இந்நிறுவனம், இனி எல்.இ.டி., லைட் தயாரிப்பு, அவற்றுக்கான உதிரிபாகங்கள் வணிகத்தை கவனித்து கொள்ளும். இதற்காக, சிக்னிபை நிறுவனத்துக்கு சொந்தமான வதோதராவில் உள்ள எல்.இ.டி., லைட் தயாரிப்பு ஆலை இந்நிறுவனத்தின் வசம் வருகிறது. வரும் நவ., 30க்குள் இதற்கான பரிவர்த்தனை நிறைவடையும் என எதிர்ப்பார்க்க்ப்படுகிறது.
|  | 
நிலுவை
எஸ்.பி.ஐ., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா உட்பட  ஏழு பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற 8,585 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என, பங்குச்சந்தையில் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல்.. தெரிவித்துள்ளது. இதில், கூடுதல் வட்டி 791 கோடி ரூபாய்; திருப்பி செலுத்தாத முன்பணம் 1,869 கோடி ரூபாய் ஆகியவை அடங்கும். நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 34,484 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
|  | 

