
ஏத்தர் எனர்ஜி பங்குகள் டைகர் குளோபல் முழுக்கு
நி யூயார்க்கை தலைமையிடமாக கொண்ட முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல், ஏத்தர் எனர்ஜியின் 5 சதவீத பங்குகளை, 1,204 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது.
ஐ.பி.ஓ.,வுக்கு முந்தைய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், தன் வசமிருந்த 5 சதவீத ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகளை டைகர் குளோபல் முழுமையாக விற்பனை செய்து உள்ளது.
subtitle@ ஏர்டெல்லின் 0.80% பங்குகளை சந்தையில் விற்றது சிங்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் 0.80 சதவீத பங்குகளை, 10,353 கோடி ரூபாய்க்கு சந்தையில் சிங்டெல் விற்பனை செய்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான சிங்டெல், நிறுவன முதலீட்டாளருக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வாயிலாக பங்குகளை விற்றதாக சிங்கப்பூர் பங்குச்சந்தையில் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, சிங்டெல் வசமுள்ள ஏர்டெல் பங்குகள் 27.50 சதவீதமாக உள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 3.46 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

