துபாய் சோலார் மின் திட்டம் கைப்பற்றியது எல் அண்டு டி.,
துபாய் சோலார் மின் திட்டம் கைப்பற்றியது எல் அண்டு டி.,
ADDED : ஜன 31, 2024 12:28 AM

துபாய் சோலார் மின் திட்டம் கைப்பற்றியது எல் அண்டு டி.,
துபாயில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான திட்டத்தை பெற்றுள்ளதாக, எல் அண்டு டி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், மும்பை பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், இத்திட்டம், சூரிய ஒளி மின்னழுத்த ஆலை அமைப்பதையும் உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவத்தின் இயக்குனர் மாதவதாஸ் கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சி பெறும் பிராந்தியங்களில், ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்த புதுமையான, புதுப்பிக்கதக்க எரிசக்தி தீர்வுகள் மற்றும் திட்ட மேலாண்மைக்கான நிபுணத்துவத்தை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியை அதிகரித்த இந்திய கட்டுப்பாடுகள்
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, கடந்த ஆண்டு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி மற்றும் புழுங்கல் அரிசிக்கு விதித்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதிக்கான தேவைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சேலா ராம் கெவ்லானி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில், 50 லட்சம் டன்னுக்கு மேல் அதிகரிக்கக்கூடும். இது கடந்த ஆண்டு 37 லட்சம் டன்னாக இருந்தது. இந்த ஆண்டு பாசுமதி அரிசி ஏற்றுமதி, 60 சதவீதம் அதிகரித்து, 9.50 லட்சம் டன்னாகவும், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரித்து, 42.5 லட்சம் டன்களாகவும் இருக்கும் என, கெவ்லானி தெரிவித்தார்.