தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வளர்ச்சி பாதைக்கு பொருளாதாரம் திரும்பும்: கோயல் நம்பிக்கை

வளர்ச்சி பாதைக்கு பொருளாதாரம் திரும்பும்: கோயல் நம்பிக்கை

வளர்ச்சி பாதைக்கு பொருளாதாரம் திரும்பும்: கோயல் நம்பிக்கை


ADDED : டிச 13, 2024 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்குள், இந்திய பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.40 சதவீதமாக சரிந்ததை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்ததாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் போது, நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தல் காலகட்டத்தின் போது, கொள்கை முடிவுகள் மேற்கொள்வது, அதனை செயல்படுத்துவது போன்றவை பாதிப்புக்குள்ளாவது இயல்பே. இதனால் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான செலவினம் குறைந்து, வளர்ச்சி சரிந்தது. இதன் பிரதிபலிப்பே இரண்டாம் காலாண்டு முடிவில் வெளிப்பட்டது.

ஆனால், நடப்பு காலாண்டின் பொருளாதார தரவுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளன. மீண்டெழுந்துள்ள உள்கட்டமைப்பு செலவு உள்ளிட்டவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என நம்புகிறேன்.

இவ்வாறு தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us