தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கல்வி, கலை, விளையாட்டு... பன்முகத் திறன்களை வளர்க்கும் டி.ஏ.வி.

கல்வி, கலை, விளையாட்டு... பன்முகத் திறன்களை வளர்க்கும் டி.ஏ.வி.

கல்வி, கலை, விளையாட்டு... பன்முகத் திறன்களை வளர்க்கும் டி.ஏ.வி.


UPDATED : அக் 12, 2026 06:50 PM

ADDED : அக் 12, 2026 06:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:50 PM ADDED : அக் 12, 2026 06:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருவருக்கு என்றும் நிலைத்திருக்கக் கூடிய உயர்ந்த செல்வமானது கல்வி மட்டுமே, மற்றைச்செல்வங்கள் அனைத்துமே நிலைத்த செல்வங்கள் அல்லவாம், எனவேதான், மாணவச் செல்வங்களுக்கு என்றுமே நிலைத்திருக்கக் கூடிய கல்விச்செல்வத்தை வழங்க வேண்டுமென்ற நல்லதொரு நோக்கத்தில் ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்தர் பெயரால் டி.ஏ.வி பள்ளி 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கல்வியில் சிறப்பு, ஒழுக்கத்தில் உயர்வு, சாதனையில் முன்னிலை, அறிவோடு ஆளுமையையும் வளர்த்தல், எதிர்காலத்தை உருவாக்கும் பண்முகத் திறமைகள் இவையே ஆதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளியின் இலக்காகும்.

தேசபக்தி, தெய்வபக்தி, ஒழுக்கம் ஆகிய நற்பண்புகளைப் போதிப்பதையும், தனித்திறனைக் கண்டறிந்து, அவற்றை வளர்த்துக் கொள்ளும் வகையில் துணை நிற்பதையும், உடற்பயிற்சி, விளையாட்டுகள் வாயிலாக அவர்களை வலுவுள்ளவர்களாகச் செய்வதையும், தியானம், யோகா மூலமாக அவர்களின் ஆத்ம பலத்தை வளர்ப்பதையும், இப்பள்ளி தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூடைப்பந்து, சதுரங்கம், டேக்குவாண்டோ, சிலம்பம், ஸ்கேட்டிங், வில்வித்தை ஆகிய விளையாட்டுகளில் மாநில,தேசிய அளவிலும் முதல் இடம் பெற்று பள்ளிக்குச் சிறப்பு செய்திருக்கிறார்கள். வயலின், மிருதங்கம், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு ஆகிய நுண்கலைகளிலும் பரிசுகள் பல பெற்று வருகின்றனர்.

ஆதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளி, நரசிம்மநாயக்கன் பாளையம், ராம் நகரில், கே.எஸ்.பி., பம்பு நிறுவனத்திற்கு எதிரே, வானளாவிய கட்டிடங்கள், அதிநவீன அறிவியல் கணினி ஆய்வகங்கள், உடற்பயிற்சி, விளையாட்டுக் கூடங்கள், யோகா, தியான அரங்குகள் என உயர்ந்த வசதிகளுடனும், அனுபவமிக்க திறன்மிகு ஆசிரியைகளுடனும் இயங்கி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us