தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஸ்ரீபெரும்புதுாரில் நிலம் குத்தகைக்கு எடுத்தது ஐச்சர்

 ஸ்ரீபெரும்புதுாரில் நிலம் குத்தகைக்கு எடுத்தது ஐச்சர்

 ஸ்ரீபெரும்புதுாரில் நிலம் குத்தகைக்கு எடுத்தது ஐச்சர்


ADDED : ஆக 07, 2026 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 01:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ராயல் என்பீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐச்சர் மோட்டார்ஸ் நிறுவனம், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள காசாகிராண்ட் தொழில் பூங்காவில், 4 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை 7 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.

உதிரிபாகங்களை சேமிக்கும் கிடங்கு, உதிரி பாக அசெம்பிளி, வினியோக தொடர் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த நிலப்பரப்பு பயன்படுத்தப்படும்.

இது, என்பீல்டு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் தளவாட செயல்பாடுகளை வலுப்படுத்த உதவியாக இருக்கும். அதேசமயம், 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக உள்ள ஆந்திர ஆலையின் உற்பத்திக்கு ஆதரவாகவும் செயல்படும் என கூறப்படுகிறது.

ஆந்திர ஆலையில், ஆண்டுக்கு ஒன்பது லட்சம் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்ய முடியும். இதனால், என்பீல்டு நிறுவனத்தின் உ ற்பத்தி திறன் 14.6 லட்சத்தில் இருந்து 23.6 லட்சம் வாகனங்களாக அதிகரிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us