' மின்சார ஒயர், கேபிள் விலை ஜன., 14 முதல் 5% அதிகரிக்கும்'
' மின்சார ஒயர், கேபிள் விலை ஜன., 14 முதல் 5% அதிகரிக்கும்'
ADDED : ஜன 08, 2026 01:13 AM

சென்னை, கட்டுமான பணிகளில் மின்சார இணைப்பு பணிக ளுக்கு பயன்படுத்தப்படும் ஒயர், கேபிள்களின் விலை, ஜன., 14 முதல் ஐந்து சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட உள்ளதாக உற்பத்தி யாளர்கள் தெரிவித்தனர்.
வீடு உட்பட கட்டுமான திட்டங்களில், மின்சார இணைப்பு பணிகளுக்கு காப்பர் அடிப்படையிலான ஒயர்கள், கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒயரிங் பணிகளில் காப்பர் அடிப்படையிலான ஒயர்கள், கேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில், தற்போதைய நிலவரப்படி, 295 அடி நீளம் கொண்ட ஒயர், கேபிள் காயில்கள், 1,400 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மி.மீ., அடிப்படையில் இதன் தடிமன் மற்றும் வகைக்கு ஏற்ப விலையும் வேறுபடும்.
மின்சார ஒயரிங் பணிக்கான ஒயர்கள், கேபிள்க ளின் விலை, சமீப காலமாக உயராமல் இருந்தது. இந்நிலையில், இதன் விலை திடீரென உயர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இது குறித்து கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது:
வீடுகளில் மின்சார இணைப்பு பணிகளுக்கான ஒயர், கேபிள்களில் காப்பர் தான் பிரதான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் காப்பர் விலை கடந்த சில வாரங்களில் வெகுவாக உயர்ந்துள்ளது.
இதனால், ஒயர், கேபிள்கள் தயாரிப்பு செலவுகளும் பலமடங்காக உயரும் நிலை ஏற்பட்டள்ளது. இதன் காரணமாக ஒயர், கேபிள்கள் விலையை ஐந்து சதவீதம் வரை உயர்த்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜன., 14 முதல் இப்பொருட்களின் புதிய விலை அமலுக்கு வரும் என, பினோலெக்ஸ் உட்பட முன்னணி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால், பழைய விலைக்கு ஒயர், கேபிள்கள் வாங்குவதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒயர், கேபிள்களில் செம்பு தான் பிரதான மூலப்பொருள்; சர்வதேச சந்தையில் செம்பு விலை அதிக உயர்வால், தயாரிப்பு செலவு அதிகரிப்பு

