ADDED : நவ 06, 2024 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரியல் எஸ்டேட் முதலீட்டில் ஈடுபட்டுள்ள 'எம்பசி ஆர்.இ.ஐ.டி.,' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து, அரவிந்த் மையா ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, உடனடியாக இடைக்கால தலைமை செயல் அதிகாரியை நியமிக்குமாறு, எம்பசி நிறுவனத்துக்கு செபி உத்தரவிட்டுள்ளது.
செபியின் விதிமுறைகள் படி, முதலீட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எந்த ஒரு நிதி முறைகேட்டிலும் தொடர்பிருக்கக் கூடாது. 'காபி டே' நிறுவனத்தின் நிதி முறைகேட்டில் அப்போது அங்கு ஆடிட்டிங் பார்ட்னராக இருந்த அரவிந்த் மையாவுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அவரை நீக்குமாறு செபி உத்தரவு பிறப்பித்திருந்தது.

