தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/அலுவலக பணிக்கான வேலைவாய்ப்பு செப்டம்பரில் 2 சதவீதம் அதிகரிப்பு

அலுவலக பணிக்கான வேலைவாய்ப்பு செப்டம்பரில் 2 சதவீதம் அதிகரிப்பு

அலுவலக பணிக்கான வேலைவாய்ப்பு செப்டம்பரில் 2 சதவீதம் அதிகரிப்பு


UPDATED : அக் 03, 2026 03:35 AM

ADDED : அக் 02, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 03:35 AM ADDED : அக் 02, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவில் அலுவலக பணிக்கான வேலைவாய்ப்பு, செப்டம்பர் மாதத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'நௌக்ரி' நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அலுவலக பணிகளுக்கான மாதாந்திர 'ஜாப்ஸ்பீக்' குறியீடு, செப்டம்பர் மாதத்தில் 3,053 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 3,002 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் நிறுவன பணிகளுக்கான வேலைவாய்ப்பு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஹைதராபாத் 9 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் முன்னிலை வகிக்கிறது. அதேவேளையில், சென்னை 6 சதவீத வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு மற்றும் கொல்கட்டா தலா 4 சதவீத வளர்ச்சியுடன் அடுத்த இடத்திலும் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறையில் வேலைவாய்ப்பு இதுவரை இல்லாத அதிகபட்ச அளவில் உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உயர்வு

*ஏ.ஐ., இயந்திர கற்றல்: 20%

*ஆட்டோமொபைல்: 11%

மாற்றமில்லாத துறைகள்:

காப்பீடு, சில்லறை விற்பனை, வங்கி மற்றும் நிதி சேவைகள், ரியல் எஸ்டேட்

வேலைவாய்ப்பு சரிந்த துறைகள்



வாடிக்கையாளர் சேவை: 11%

சுற்றுலா துறை: 11%

கல்வி துறை: 18%

மென்பொருள் சேவைகள்: 4%

நுகர்வோர் பொருட்கள் விற்பனை:4%

சுகாதாரத் துறை: 3%

நகரங்களின் நிலை

டெல்லி:6% (சரிவு)

மும்பை:6% (சரிவு)

ஹைதராபாத்:9% (உயர்வு)

சென்னை: 6% (உயர்வு)

Image 1625692

வேலைவாய்ப்பு





அதிகரிப்புக்கான காரணங்கள்

 ஏ.ஐ., இயந்திர கற்றல் சார்ந்த பணிகளுக்கான தேவை அதிகரித்தது

 ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி

 உலகளாவிய திறன் மையங்களில் தேவை அதிகரிப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us