தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கடந்த மாதத்தில் வேலைவாய்ப்புகள் 12% உயர்ந்ததாக ஆய்வில் தகவல்

 கடந்த மாதத்தில் வேலைவாய்ப்புகள் 12% உயர்ந்ததாக ஆய்வில் தகவல்

 கடந்த மாதத்தில் வேலைவாய்ப்புகள் 12% உயர்ந்ததாக ஆய்வில் தகவல்


UPDATED : மார் 04, 2026 12:57 AM

ADDED : மார் 04, 2026 12:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2026 12:57 AM ADDED : மார் 04, 2026 12:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியைவிட இது 12 சதவீத வளர்ச்சி என்று 'நவ்க்ரி' நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் நவ்க்ரி 'ஜாப்ஸ்பீக்' என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறியீட்டை வெளியிடுகிறது. அத்தளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள், வேலை அளிக்கும் நிறுவனங்களின் தேடல் தகவல்களை அடிப்படையாக கொண்டு இக்குறியீடு கணக்கிடப்படுகிறது.

நவ்க்ரி அறிக்கை:

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் வேலைவாய்ப்பு குறியீடு, 3,233 புள்ளிகளாக அதிகரித்திருக்கிறது. கடந்த 2025 பிப்ரவரியில் இது, 2,890 புள்ளிகள் ஆக இருந்தது. இது, 12 சதவீதம் அதிகம். நாட்டின் வேலைவாய்ப்பு சந்தை வலுவான நிலையில் இருப்பதை இது காட்டுகிறது.

ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பல நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதும், ஐ.டி., துறை மீண்டு வந்திருப்பதும் இதற்கு காரணம் ஆகும். அலுவலகங்களில் பணிபுரிவோருக்கான வேலைவாய்ப்பு சந்தை கடந்த பிப்ரவரியில் நல்ல முன்னேற்றத்தை சந்தித்திருக்கிறது.

Image 1543806

மாதாந்திர வளர்ச்சி என்ற அடிப்படையில் பார்க்கும்போது இவ்வாண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 23 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக இம்மாதங்களில் 13- - 16 சதவீத வளர்ச்சிதான் இருக்கும். அதேபோல, ஐ.டி., துறையில் முந்தைய ஆண்டு பிப்ரவரியோடு ஒப்பிடும்போது, 2026 பிப்ரவரியில், 6 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us