தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 2வது வாரமாக சரிவுடன் முடிவு

2வது வாரமாக சரிவுடன் முடிவு

2வது வாரமாக சரிவுடன் முடிவு


ADDED : அக் 11, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

 பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிவுடன் முடிவடைந்தன

 வங்கி துறை சார்ந்த பங்குகள் மற்றும் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவன பங்குகள் வீழ்ச்சி, சந்தையின் இறக்கத்துக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது

 சீனாவின் நிதியமைச்சகம், சனிக்கிழமை அன்று பத்திரிகை யாளர்களை சந்தித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக வந்த செய்தி, உலக முதலீட்டாளர்களை ஜாக்கிரதை உணர்வுடன்சந்தையை அணுக வைத்தது

 நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு உள்ளிட்ட சில முக்கிய தரவுகள் வெளியாக இருப்பதை முன்னிட்டு, உள்நாட்டு வர்த்தகர்களும் கவனமுடன் சந்தையை அணுகினர்

 அடுத்து வரும் நாட்களில் முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவர இருப்பதால், அதை ஒட்டியே சந்தையின் போக்கு அமையும் என்கின்றனர்நிபுணர்கள்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 4,163 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.77 சதவீதம் சரிந்து, 78.79 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்து, 84.09 ரூபாயாக

இதுவரை இல்லாத அளவில் சரிவை கண்டது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

அதிக ஏற்றம் கண்டவை

 டிரென்ட்

 ஹிண்டால்கோ

 எச்.சி.எல்., டெக்

 டெக்மஹிந்திரா

 ஓ.என்.ஜி.சி.,

அதிக இறக்கம் கண்டவை

 டி.சி.எஸ்.,

 மஹிந்திரா & மஹிந்திரா

 ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்

 சிப்லா

 அதானி என்டர்பிரைசஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us