தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ பொறியியல் மாநாடு சென்னையில் துவக்கம்

 பொறியியல் மாநாடு சென்னையில் துவக்கம்

 பொறியியல் மாநாடு சென்னையில் துவக்கம்


ADDED : செப் 04, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அமெரிக்க மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் சங்கமான ஏ.எஸ்.எம்.இ., சார்பில் நடத்தப்படும் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான 'ஐமெக் இந்தியா 2026' சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சியை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் துவக்கி வைத்தார்.

ஆற்றல், இயக்கம், உற்பத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள், 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரங்கில், மாணவர்கள் தங்களின் தொழில்நுட்ப திட்ட வரைவுகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த மூன்று நாள் நிகழ்வு நாளையுடன் நிறைவடைகிறது.

ஏ.எஸ்.எம்.இ., அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் கோஸ்டபைல், ஏ.எஸ்.எம்.இ., இந்தியா தலைவர் மதுகர் சர்மா, அண்ணா பல்கலைக்கழக சி.யு.ஐ.சி., இயக்குநர் டாக்டர் கே.சண்முக சுந்தரம் மற்றும் ஏ.எஸ்.எம்.இ., அறக்கட்டளை துணை இயக்குநர் அவனி மல்ஹோத்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us