தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 36% உயர்வு

பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 36% உயர்வு

பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி 36% உயர்வு


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொல்கட்டா: பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, கடந்த அக்., மாதத்தில் 36 சதவீதம் அதிகரித்து, 1.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது எனவும் இரும்பு, ஸ்டீல், தாமிரம், மின் இயந்திரங்கள் மற்றும் வாகன ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சியே இதற்கு காரணம் எனவும் பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடப்பு நிதியாண்டில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி இதுவரை ஒவ்வொரு மாதமும் வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. கடந்த அக்., மாதத்தில் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் இரும்பு, ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள், மின் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.

நாட்டின் மொத்த சரக்கு ஏற்றுமதியில், பொறியியல் பொருட்களின் பங்கு கடந்த அக்., மாதத்தில் 25.80 சதவீதமாக இருந்தது. பொறியியல் பொருட்கள் ஏற்றுமதிக்கான 34 பிரிவுகளில், 31 பிரிவுகள் வளர்ச்சியை கண்டுள்ளன.

பொறியியல் பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா 21 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us