உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 08, 2026 04:08 PM
ADDED : அக் 08, 2026 04:06 PM
அ நிறம் | அளவு
பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்
பேக்கேஜிங் இயந்திரங்கள், ஆட்டோமேஷன், பிரிண்டிங், லேபிளிங் மற்றும் பேக்கேஜிங் பொருட்களுக்கான ‘பேக் விஷன் எக்ஸ்போ 2026’ கண்காட்சி, அக்.15 முதல் 17 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது.
பங்கேற்கும் துறைகள்
*பேக்கேஜிங் இயந்திரங்கள்
*ஆட்டோமேஷன் உபகரணங்கள்
* பிரிண்டிங் தொழில்நுட்பங்கள்
*லேபிளிங் வசதிகள்
* பேக்கேஜிங் பொருட்கள்
யாருக்கு பயன்படும்
உணவு மற்றும் பானம், மருந்து, எப்.எம்.சி.ஜி., இ-காமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உற்பத்தி துறைகளை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும்.
எதை அறியலாம்
புதிய பேக்கேஜிங் இயந்திரங்கள், தானியங்கி வசதிகள், பிரிண்டிங் மற்றும் லேபிளிங் முறைகள், பல்வேறு பேக்கேஜிங் பொருட்கள் குறித்து ஒரே இடத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
